

‘தி இந்து’ தமிழ் நாளிதழ், சென்னை எஸ்கேஆர் பொறியியல் கல்லூரி இணைந்து நடத்தும் பிளஸ் 2 மாணவர் களுக்கான ‘இனிது இனிது தேர்வு இனிது’ என்ற சிறப்பு வழிகாட்டி நிகழ்ச்சி காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள அறிஞர் அண்ணா அரங்கில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெறுகிறது.பாரம்பரியம் மிக்க ‘தி இந்து’ குழுமத்தில் இருந்து வெளி வரும் ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் கடந்த செப்டம்பர் 16-ம் தேதியுடன் 3 ஆண்டு களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
விவசாயிகள், பெண்கள், மாணவர் கள் உள்ளிட்டோரின் மேம்பாட்டுக்காக நாளிதழ் வழியாக மட்டுமின்றி நேரடி யான கள அளவிலும் பல நிகழ்ச்சிகளை ‘தி இந்து’ நாளிதழ் நடத்தி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் மாண வர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சிகள் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், சென்னை ஆகிய இடங்களில் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் குறிப்பாக அரசுப் பள்ளி களில் படிக்கின்ற மாணவ, மாணவிகள் அதிக அளவில் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
இந்நிலையில், ‘தி இந்து’ நாளிதழ், எஸ்கேஆர் பொறியியல் கல்லூரி இணைந்து நடத்தும் ‘இனிது இனிது தேர்வு இனிது’ வழிகாட்டி நிகழ்ச்சி பட்டு நகரான காஞ்சிபுரத்தில் பேருந்து நிலை யம் அருகே உள்ள அறிஞர் அண்ணா அரங்கில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்நிகழ்ச்சி நடை பெறும். இதில், இசைக்கவி ரமணன் சிறப்புரையாற்றுகிறார். எஸ்கேஆர் பொறியியல் கல்லூரி தலைவர் கே.ராம தாஸ், ஸ்ரீவித்யா கல்வி மையத்தின் கவு ரவ இயக்குநர் எஸ்.பி.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
பிளஸ் 2 கணிதம், இயற்பியல், வேதி யியல், உயிரியல் பாடங்களை எளிதா கப் படிப்பது, தேர்வுக்குத் தயாராவது, 200-க்கு 200 மதிப்பெண் பெறுவதற்கான நுணுக்கங்கள் குறித்து அந்தந்த பாட ஆசிரியர்கள் ஆலோசனை வழங்கு வர். அனுமதி இலவசம்.
நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் ஃபார் முலா புத்தகம், முக்கிய வினாக்கள் அடங்கிய கையேடு இலவசமாக வழங் கப்படுகிறது. மேலும், அனைவருக்கும் மதிய உணவும் வழங்கப்படும்.
இந்த நிகழ்ச்சியை ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் மற்றும் எஸ்கேஆர் பொறி யியல் கல்லூரியுடன் கேட், ‘சென்னை அகாடமி ஆஃப் ஆர்க்கிடெக்சர் அண்ட் டிசைன்’ நிறுவனம், மை டிவி ஆகியவை இணைந்து நடத்துகின்றன.