Published : 01 Sep 2016 08:24 AM
Last Updated : 01 Sep 2016 08:24 AM

தேவாலயத்தில் கொலை செய்யப்பட்ட ஆசிரியை பிரான்சினா மிகவும் அமைதியானவர்: சக ஆசிரியைகள் உருக்கம்

தூத்துக்குடி ஜார்ஜ் சாலை, இந்திரா நகரைச் சேர்ந்த நியூ மென் மகள் பிரான்சினா(24), ஒரு தலைக் காதல் விவகாரத்தில் நேற்று படுகொலை செய்யப்பட் டார். இவர், தூத்துக்குடி சண்முக புரம் தூய பேதுரு தேவாலய வளாகத்தில் அமைந்துள்ள மழலையர் பள்ளியில் ஆசிரியை யாக பணியாற்றி வந்தார்.

ஆசிரியை பிரான்சினா நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை நீயூமென், தோணியில் மாஸ்டராக வேலை பார்த்தவர். தற்போது வேலைக்குச் செல்ல வில்லை. தாய் ரூபினா இல்லத் தரசி. பிரான்சினாவின் சகோதரர் பிராங்கிளின், கப்பலில் வேலை செய்து வருகிறார்.

பிரான்சினா கடந்த 5 ஆண்டு களாக இந்த பள்ளியில் ஆசிரியை யாக பணியாற்றி வந்துள்ளார். அவர் பள்ளிக்கு தவறாமல் வந்துவிடுவார். குழந்தைகளிடம் மிகவும் அன்பாக பழகுவார். இதனால் குழந்தைகளுக்கு அவரை மிகவும் பிடிக்கும்.

செப்டம்பர் 8-ம் தேதி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்ததால் நேற்றோடு பணியை விட்டுவிட அவர் முடிவு செய்திருந்தார். இதனால் உற்சாகத்துடன் காலை யில் பள்ளிக்கு புறப்பட்டு வந்த அவருக்கு இப்படி ஆகிவிட்டதே என, சக ஆசிரியைகள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் கண்ணீருடன் தெரிவித்தனர்.

பிரான்சினா மிகவும் அடக்க மானவர். யாரிடமும் அநாவசிய மாக பேச மாட்டார் என, அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சோகத்தில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x