

கடல் நீரில் கச்சா எண்ணெய் பரவியுள்ள நிலையில், மீன் களைச் சாப்பிடுவதால் உடல்நலத் துக்கு பாதிப்பு ஏற்படாது என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மீனவர் சங்கம் சார்பில் நேற்று மீன் உணவுத் திருவிழா நடைபெற்றது.
எண்ணூர் துறைமுகம் அருகே நடந்த கப்பல் விபத்தில் ஒரு கப் பலில் இருந்த கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது. இதனால் மீன்கள் மற்றும் ஆமை கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் மீன் உணவை சாப்பிட தயங்கினர். இதன் காரணமாக மீனவர்களின் வாழ் வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மீன்களைச் சாப்பிடுவதால் உடல்நலத்துக்கு பாதிப்பு ஏற்படாது என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அகில இந்திய மீனவர் சங்கம் சார்பில் நேற்று மீன் உணவுத் திருவிழா நடைபெற்றது. காசிமேட்டில் நடைபெற்ற இவ்விழாவில், எக்ஸ் னோரா எம்.பி.நிர்மல், நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், திரைப்பட இயக்குநர் மோகன்ராஜ் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.இ.ராஜா பேசும்போது, “கடந்த 2004-ம் ஆண்டு முதல் மீனவர்கள் தொடர்ந்து பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.
தற்போது கடலில் கலந்துள்ள கச்சா எண்ணெய் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ரூ.5 லட்சம் செலவு செய்து விசைப்படகில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர் களுக்கு ரூ.50 ஆயிரம் வரை கூட மீன்கள் விற்பனையாவதில்லை.
மீன் உணவில் ஒமேகா 2, 6, 7 என புரதச்சத்துக்கள் உள்ளன. தற் போதைய சூழ்நிலையில் மீன் உணவை சாப்பிடுவதால் எவ்வித தீங்கும் ஏற்படாது. எனவே பொது மக்கள் தைரியமாக மீன் உணவு களை உட்கொள்ளலாம்’ என்றார்.
நிகழ்ச்சியில், சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் பி.ரவி, சௌந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.