

பலத்த மழையால் காட்டாறு க ளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, பாதுகாப்பு கருதி பக்தர்கள் சதுரகிரி மலைக்குச் செல்ல நேற்று அனுமதிக்கப்பட வில் லை. இதனால் சுமார் 3 ஆயிரம் பக்தர்கள் அடிவாரப் பகுதியிலே யே திரும்பிச் சென்றனர்.
விருதுநகர் மாவட்டம், வத்தி ரா யிருப்பு அருகே உள்ள சதுர கிரி மலையில் சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்கள் அமைந்துள்ளன. 18 சித்தர்கள் வழிபட்டதாகக் கூறப்படும் இத் த லத்தில் பிரதோசம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
வரும் 2-ம் தேதி ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. அன்றைய தினமே அமாவாசையும் வருகிறது. இதுபோல் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வரும் என்பதால் இந்த ஆண்டு சதுரகிரி மலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல நேற்று முன்தினம் முதல் வரும் 4-ம் தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 1,500-க் கும் மேற்பட்ட பக்தர்கள் சது ரகிரி மலைக்குச் செல்ல நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டனர். பிற்பகலில் ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் திரும்பினர்.
மாலையில் சுமார் 1 மணி நேரத் துக்கும் மேல் பெய்த பலத்த மழை யால் காட்டாறுகளில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் மலையில் இருந்த 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கீழே இறங்க அனுமதிக் கப்படவில்லை. அவர்கள் மலையி லேயே தங்க வைக்கப்பட்டனர்.
நேற்று காலை அவர்கள் பாதுகாப்பாக கீழே அழைத்து வரப் பட்டனர். நேற்றும் காலை முதல் வானம் மேக மூட்டமாகக் காணப் பட்டதால் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால், சதுரகிரிக்குச் செல்ல பக்தர்களுக் கு அனுமதி மறுக்கப்பட்டது.
மலையின் நுழைவு வாயில் பகுதியான வண்டிப்பேட்டையில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டனர். அவர்களி டம், விருதுநகர் மாவட்ட ஆட்சி யர் (பொறுப்பு) சி.முத்துக்குமரன் மற்றும் போலீஸார் நிலைமையை விளக்கிக் கூறினர். இருப்பினும் பிற்பகல் வரை ஆயிரக்கணக் கான பக்தர்கள் காத்திருந்தனர் . ஆனால், சதுரகிரி மலைக்குச் செல்ல போலீ ஸார், வனத் துறையினர் அனுமதிக் காததால் பக்தர்கள் திரும்பிச் சென்றனர். சதுரகிரி மலைப் பகுதி யில் சுமார் 1,200 போலீஸார் பாது காப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.