Published : 28 Oct 2013 08:51 AM
Last Updated : 28 Oct 2013 08:51 AM

வேலூர் சிறை அதிகாரிகள் சமரசம்: முருகன் உண்ணாவிரதம் வாபஸ்

வேலூர் மத்திய சிறையில் 3 கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்ட முருகனின் உண்ணாவிரதம் 9 மணி நேரத்தில் முடிந்தது.



முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற முருகன், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் இவரது மனைவி நளினி வேலூர் பெண்கள் தனிச்சிறையில் உள்ளார்.

இந்நிலையில், வேலூர் பெண்கள் சிறையில் உள்ள தனது மனைவிக்கு மினரல் வாட்டர் வழங்கவேண்டும், ரத்த வகை உறவினர்கள் தவிர பிற நபர்களும் சந்திக்க அனுமதிக்க வேண்டும், சிறையில் உள்ள சக பெண் கைதிகளை நளினி சந்தித்து பேச அனுமதிக்க வேண்டும் என 3 கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமை பகல் 12 மணி முதல் திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் முருகன் ஈடுபட்டார்.

சனிக்கிழமை இரவு 8 மணியளவில் கூடுதல் சிறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் நடத்திய பேச்சு வார்த்தையில் சுமுக முடிவு ஏற் பட்டது. அப்போது, முருகனின் கோரிக்கைகள் சிறைத்துறை நிர்வா கத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும்.

கோரிக்கைகளை நிறை வேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து சனிக்கிழமை இரவு சிறை நிர்வாகம் வழங்கிய சப்பாத்தியை முருகன் சாப்பிட்டு உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x