

நாகூர் தர்காவில் நடைபெறும் கந்தூரி விழாவுக்காக தயார் செய்யப்பட்ட சந்தனக்கூடு வெள்ளிக் கிழமை அதிகாலை தீப்பற்றி எரிந்தது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழாவை ஒட்டி நாகப்பட்டினம் நகரில் இருந்து அலங்கரிக்கப்பட்ட கூட்டில் வைத்து சந்தனம் ஊர்வல மாக எடுத்துச் செல்லப்படுவது வழக்கம். சந்தனம் எடுத்துச் செல்லும் கூடு நாகப்பட்டினம் ஜமாத்தினரால் செய் யப்படும். மூங்கில்களால் கூடு செய்து அதற்கு வண்ணம் தீட்டி, அதனை வண்ண காகிதங்கள், பூக் களைக் கொண்டு அலங்கரித்து அதில் சந்தனத்தை வைத்து எடுத்துச் செல்வார்கள். கூடு செய்யும் வேலை கடந்த சில நாட்களாக நாகப்பட்டினம் அபிராமி அம்மன் கோயில் திடல் அருகே நடைபெற்று வந்தது. ஐம்பது சதவீத பணிகள் முடி வடைந்திருந்த நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் அக்கூட்டின் ஒரு பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்தது.
அதனைக் கண்ட கூடு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பாபுஜி (எ) காதர் நாகப்பட்டினம் தீயணைப்புத்துறை அலுவலகத்துக்கும் நாகப்பட்டினம் ஜமாத் தலைவரான லாசா மரைக்காயருக்கும் தகவல் தெரிவித்தார். தீயணைப்பு அலுவலர்கள் வந்து தீயை அணைத்தனர். ஆனாலும் கூட் டின் ஒரு பக்கம் பெருமளவு எரிந்து விட்டது. இதுகுறித்து லாசா மரைக்காயர் கொடுத்த புகாரின்பேரில் நாகப்பட்டினம் நகர காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.