திருச்சி சிறையில் கன்னியாஸ்திரியை கத்தியால் குத்தியவர் ராஜேஷ்கண்ணா

திருச்சி சிறையில் கன்னியாஸ்திரியை கத்தியால் குத்தியவர் ராஜேஷ்கண்ணா
Updated on
1 min read

பேரறிவாளனை தாக்கிய ராஜேஷ்கண்ணா கடந்த 2011-ல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது, திருச்சி அருகே உள்ள பத்தாளப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த தனியார் கல்லூரியில் பணிபுரிந்த கன்னியாஸ்திரி ஜோஸ்வாமேரி(46) வாரந்தோறும் சிறைக்குள் சென்று, கைதிகளுக்கு பல்வேறு தொழிற்பயிற்சி வகுப்புகளை நடத்தியபோது ராஜேஷ்கண்ணாவுடன் அறிமுகம் ஏற்பட்டது. அதன்பின், ராஜேஷ்கண்ணாவுடன் பேசுவதை ஜோஷ்வாமேரி திடீரென நிறுத்தியுள்ளார்.

கடந்த 2011 செப். 6-ம் தேதி ஜோஸ்வாமேரி சிறைக்கு வகுப்பெடுக்கச் சென்றபோது, ராஜேஷ்கண்ணா அவரது கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த ஜோஸ்வாமேரி, தீவிர சிகிச்சைக்குப் பின்னர் உயிர் பிழைத்தார். இந்த சம்பவத்துக்குப் பிறகே ராஜேஷ்கண்ணா திருச்சி சிறையிலிருந்து புழல் சிறைக்கும், பின்னர் வேலூர் சிறைக்கும் மாற்றப்பட்டார்.

இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “ராஜேஷ்கண்ணாவின் சொந்த ஊர் மதுரை. சிறையில் தனது உத்தரவுக்கு கட்டுப்படாதவர்களிடம் வெறுப்பைக் காட்டுவார். திருச்சி சிறையில் இருந்தபோது, அதுபோல அவர் நடந்துகொண்டதால் சிறை நிர்வாகத்துக்கும், அவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in