வைகோவுக்கு அவமதிப்பு: தினகரன் கண்டனம்

வைகோவுக்கு அவமதிப்பு: தினகரன் கண்டனம்
Updated on
1 min read

மலேசியா சென்ற வைகோவை நடத்திய விதம் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்று அதிமுக அம்மா கட்சி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் தினகரன் வெளியிட்ட பதிவில், ‘வைகோவை மலேசிய அரசு நடத்திய விதம் அதிர்ச்சி அளிக்கிறது. முறையாக விசா பெற்று சென்றவரை தனி அறையில் அடைத்து வைத்து, இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியது கண்டிக்கத்தக்கது. இதுபற்றி மலேசிய அரசிடம் இந்திய வெளியுறவுத் துறை விசாரித்து தனது கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.

கடந்த 8-ம் தேதி திடீரென டெல்லி சென்ற டிடிவி தினகரன், 2 நாட்கள் அங்கு தங்கியிருந்தார். பாஜக தலைவர்கள் சிலரை அவர் சந்தித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் நேற்று சென்னை திரும்பினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in