

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு திருப்திகரமாக இல்லை என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணசேன் வேதனை தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியது: வரும் உள்ளாட்சித் தோ்தலில் பாஜக தனித்து போட்டியிடவுள்ளது. சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் தற் கொலை செய்துகொண்டதற்கு சிறைத் துறையினரின் அலட்சி யமே காரணம். இப்பிரச்சினையில் ஜாதியை மையப்படுத்தக்கூடாது.
காஷ்மீரில் ராணுவத்தினர் மீதான தாக்குதலுக்கு பிரதமர் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தா னுக்கு மறக்க முடியாத பாடத்தை இந்தியா கண்டிப்பாக கற்றுக்கொடுக்கும்.
காவிரி பிரச்சினை தொடர்பாக கர்நாடக மாநிலத்தில் நடை பெற்ற வன்முறைகளுக்கு, எதிர்க் கட்சிதான் காரணம் என்று அம் மாநில முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். இதுபோன்ற கீழ்த் தரமான செயல்களில் பாஜகவினர் ஒருபோதும் ஈடுபடமாட்டார்கள்.
மாநிலங்களுக்கிடையிலான நதிநீர்ப் பிரச்சினைக்கு, வாஜ் பாய் முன்மொழிந்த தேசிய நதிநீ்ர் இணைப்பு ஒன்றுதான் தீர்வு. ஆந்திராவில் கோதாவரி, கிருஷ்ணா ஆறுகள் இணைக்கப் பட்டுள்ளன. அதேபோல, கிருஷ்ணா, காவிரி ஆறுகளை இணைக்க வேண்டும். தமிழ்நாட் டில் உள்ள அனைத்து ஆறுகளை யும் இணைக்க வேண்டும்.
தமிழகத்தில் பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்வது வேதனைக்குரியது. மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு திருப்திகரமாக இல்லை என்றார்.