

தி. நகர் என்றாலே பெரும்பாலானோருக்கு கூட்ட நெரிசல்தான் நினைவுக்கு வரும். அந்தளவுக்கு வணிக வளாகங்களாலும், சிறு வியாபரிகளாலும் தி. நகர் சாலைகள் நிரம்பி வழியும்.
ஆனால் தற்போது சென்னை சில்க்ஸ் தீ விபத்துக்குப் பிறகு, தி. நகர் பேருந்து நிலையம் முதல் மேம்பாலம் வரை மேலும், கீழும் பொதுமக்கள் செல்ல முடியாது. சிறு வியாபாரிகள் கடை அமைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகளும், பொதுமக்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
உஸ்மான் சாலையிலும், அருகிலுள்ள பாலத்தின் மீதும் போக்குவரத்து தடை நீடிப்பதால், வெங்கட் நாராயணா சாலை வழியாகவே வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அருகிலுள்ள பிற கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க பொறுமை யாகவே கட்டிடத்தை இடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தி சென்னை சில்க்ஸ் தீ விபத்து நடந்து 6 நாட்கள் ஆகியும், காவல்துறையினரின் சாலை ஒழுங்குமுறை செயல்பாடுகள் முழுமையாக இல்லை. இதனால் உஸ்மான் சாலை, ரங்கநாதன் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது.
உஸ்மான் சாலையிலும், அருகிலுள்ள பாலத்தின் மீதும் போக்குவரத்து தடை நீடிப்பதால், வெங்கட் நாராயணா சாலை வழியாகவே வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அருகிலுள்ள பிற கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க பொறுமையாகவே கட்டிடத்தை இடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன
இன்னும் இரு நாட்களில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. ரம்ஜான் பண்டிகையும் விரைவில் வர உள்ளது. இந்நிலையில் விரைவில் கட்டிட இடிப்புப் பணிகளை முடித்து, கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்த வேண்டியது அவசியம்.
அதுவரை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு தரப்பில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்கிறார் தி. நகரைச் சேர்ந்த இளம்பரிதி.