

சென்னை பல்கலைக்கழக பதி வாளர் (பொறுப்பு) பேராசிரியர் எஸ்.கருணாநிதி நேற்று வெளி யிட்ட செய்திக்குறிப்பு: சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனம் மாணவர்களின் வசதிக்காக பல்வேறு படிப்புகளுக் குரிய மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதியை மே 15 வரை கால நீட்டிப்பு செய்துள்ளது. சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் தொலைதூரக் கல்வி நிறுவனத்தின் ஒற்றைச்சாளர சேர்க்கை மையத் தின் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஆன்லைன்வழி சேர்க்கை மூல மாகவும், சென்னை பல்கலைக் கழகத்தின் அனுமதியுடன் இயங்கும் கல்வி மையங்கள் மற்றும் நேரடி சேர்க்கை மையங்கள் மூலமாகவும் மாணவர்கள் சேரலாம். கூடுதல் விவரங்களை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனத்தின் இணையதளத்தின் (www.ideunom.ac.in) மூலம் அறியலாம்.