Published : 25 Mar 2014 08:25 AM
Last Updated : 25 Mar 2014 08:25 AM

தற்கொலை முடிவு எடுத்தாரா விமானி?

இரண்டு வார காத்திருப்புக்குப் பிறகு மலேசிய விமானம் கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாகவும் ஒருவர்கூட உயிர் பிழைக்கவில்லை என்றும் அறிவித்திருக்கிறார் மலேசிய பிரதமர் நஜீப் ரசக்.

இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் கடைசியாக விமானம் இருந்திருக்க கூடும் என்றும் அவர் சொல்லியிருக்கிறார் . விமான தரையிறங்கக்கூடிய தளங்களில் இருந்து வெகு தொலைவில் இந்த இடம் இருப்பதாக அவர் சொல்லியிருக்கிறார்.

நம்பிக்கைகளுக்கும் பயங்களுக்கும் இடையில் ஊசலாடிக்கொண்டிருந்த உலகின் காத்திருப்பு மிக மோசமான முடிவை அடைந்திருக்கிறது. இந்த முடிவுக்கு காரணமாக விமானி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இது குறித்து 'தி இந்து'விடம் பேசிய இந்திய விமான பாதுகாப்புக் குழுவின் உறுப்பினராக இருந்த மோகன் ரங்கநாதன், விமானி தற்கொலை முடிவு எடுத்திருக்க கூடும் என்று சொன்னார்.

அதை தவிர வேறு வாய்ப்பு எதுவும் இல்லை. 1997-ல் சில்க் ஏர் விமானம் ஒன்றும் இவ்வாறு விமானியின் தற்கொலை முடிவு காரணமாக வெடித்து சிதறியது. இப்போது 97 பயணிகளும் விமானத்தில் பணி புரிந்த ஏழு பேரும் இறந்தார்கள். மலேசிய விபத்திலும் அதுவே நடந்திருக்கும்.”

விமானத்தை 35000 அடி உயரத்திலிருந்து 45000 அடி உயரத்திற்கு செலுத்திய பிறகு விமானத்தில் இருந்த எல்லா தொடர்பு சாதனங்களையும் விமானி அணைத்திருக்க கூடும்.

அதனாலேயே இந்த விமானத்தை கண்டறிய இவ்வளவு காலம் பிடித்தது. சில்க் ஏர் விமான விபத்திலும் இதுவே நடந்ததாக சொல்கிறார் ரங்கநாதன்.

மலேசிய விமானியாக இருந்தவர் கேப்டன் சகரி அகமத் ஷா. இவர் மலேசிய நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரான அன்வர் இப்ரஹிமின் தீவிர விசுவாசி என்று சொல்லப்படுகிறது.

மலேசிய விமானம் விபத்துக்குள்ளான முதல் நாள்தான் அன்வர் இப்ரஹிம் கைது செய்யப்படுகிறார்.

இந்த கைதுக்கும் தற்கொலை முடிவிற்கும் சம்பந்தம் இருக்கிறதா என்று இப்போது விசாரணை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x