Published : 26 Jan 2017 07:49 PM
Last Updated : 26 Jan 2017 07:49 PM

தங்கம் விலை பவுனுக்கு ரூ.88 குறைவு

சென்னையில் வியாழக்கிழமை தங்கம் விலை பவுனுக்கு ரூ.88 குறைந்து ரூ.22 ஆயிரத்து 336க்கு விற்பனை செய்யப்பட்டது.

சர்வதேச அளவில் கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது. உள்ளூரிலும் தங்கத்தின் தேவை கணிசமாக குறைந்திருந்தது. இதனால், சென்னையில் வியாழக்கிழமை 22 கேரட் தங்கம் பவுனுக்கு ரூ.88 குறைந்து ரூ.22 ஆயிரத்து 336க்கு விற்கப்பட்டது.

22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 792க்கு விற்பனை ஆனது. இதுவே, புதன்கிழமை ரூ.2 ஆயிரத்து 803க்கு விற்கப்பட்டது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x