முழுமையாக சாலை அமைக்காததை கண்டித்து உள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பு: கரூர் அருகே கிராம மக்கள் அறிவிப்பு

முழுமையாக சாலை அமைக்காததை கண்டித்து உள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பு: கரூர் அருகே கிராம மக்கள் அறிவிப்பு
Updated on
1 min read

கரூர் அருகே முழுமையாக சாலை அமைக்காததைக் கண்டித்து, தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர்.

கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியம் மூக்கணாங்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட நத்தமேடு முதல் வீரணாம்பாளையம் வரையிலான சாலை, 2014-15-ம் ஆண்டு சாலை மேம்பாட்டு திட்டத்தில் ரூ.29.60 லட்சத்தில் அமைக்கப்பட்டது.

இதில், வீரணாம்பாளையம் பகுதியில் சாலை அமைந்துள்ள பகுதி தனக்கு சொந்தமானது என தனியார் உரிமை கொண்டாடியதால், சில மீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்கப்படவில்லை.

தற்போது, அப்பகுதியில் முட்களைப்போட்டு அவ்வழியே யாரும் செல்ல முடியாமல் தடுத்து வைத்துள்ளனர்.

இதனால், அவ்வழியே செல்பவர்கள் மாற்று வழியில் அதிக தொலைவு சுற்றிச்செல்ல வேண்டி உள்ளது.

எனவே, தனியார் ஆக்கிரமிப்பை அகற்றி, விடுபட்டுள்ள பகுதியில் சாலை அமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் நத்தமேடு சாலை தொடங்கும் இடத்தில் நேற்று கருப்புக் கொடிகளை கட்டி, சாலையை முழுமையாக அமைக்காவிடில், உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in