

திருநங்கையை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
சென்னை திருவொற்றியூர் தாங்கல் சதானந்தபுரத்தை சேர்ந்தவர் மகபூபாஷா (40). திருநங்கை. இவருக்கும், தாங்கல் புதிய காலனியை சேர்ந்த ஆரோக் கியராஜுக்கும் பல ஆண்டுகளாக தொடர்பு இருந்தது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஆரோக்கியராஜுக்கு திரு மணம் நடந்தது. இதைத் தொடர்ந்து திருநங்கை மகபூபாஷா வுடனான தொடர்பை ஆரோக்கிய ராஜ் கைவிட்டார். இதனால் ஆரோக்கியராஜுக்கு திருநங்கை மகபூபாஷா தொலைபேசியிலும், நேரிலும் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆரோக்கிய ராஜ் மகபூபாஷாவை கொலை செய்ய திட்டம் போட்டார்.
செவ்வாய்க்கிழமை காலை மகபூபாஷா வீட்டுக்கு ஆரோக்கிய ராஜ் கத்தியுடன் சென்றுள்ளார். மகபூபாஷா எதிர்பார்க்காத நேரத்தில் அவரது வயிறு, கழுத்தில் சரமாரியாக கத்தியால் குத்தி அவரை கொலை செய்தார். இதையடுத்து ரத்தக்கறை படிந்த கத்தியுடன் ஆரோக்கியராஜ் திரு வொற்றியூர் காவல் நிலையத்தில் வந்து சரண் அடைந்தார்.
காவல் துறையினர் அவரை கைது செய்து கத்தியை பறிமுதல் செய்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் கிடந்த திருநங்கை உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.