செயற்கையாக பழுக்க வைத்த 1 டன் மாம்பழங்கள் பறிமுதல்: உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை

செயற்கையாக பழுக்க வைத்த 1 டன் மாம்பழங்கள் பறிமுதல்: உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை
Updated on
1 min read

கோயம்பேடு பழ சந்தையில் விழிப்புணர்வு நடவடிக்கையின் போது, செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட 1 டன் மாம்பழங் களை உணவு பாதுகாப்பு துறை யினர் நேற்று பறிமுதல் செய்து அழித்தனர்.

உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் நேற்று 120 கடைகளில் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டு, அந்த கடைகளில் சோதனையும் நடை பெற்றது. அப்போது, பழக்கடை ஒன்றில், மாம்பழம் செயற்கை முறையில் பழுக்க வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 1 டன் மாம் பழம், 75 கிலோ கால்ஷியம் கார் பைடு கல்லை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்து, அதை அழித்தனர். மேலும் அங்கு வாழைப்பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைக்க, வைத்திருந்த 2 லிட்டர் எத்திலின் என்ற வேதிப்பொருளையும் பறிமுதல் செய்து அழித்தனர்.

உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘விழிப்புணர்வு பணி இந்த வாரம் முழுவதும் நடைபெறும். அதன் பிறகு, செயற்கை முறையில் மாம்பழங்களை பழுக்க வைத்தால், அவர்கள் மீது குற்ற நடவடிக்கையும், அபராதமும் விதிக்கப்படும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in