Published : 16 Apr 2017 10:36 AM
Last Updated : 16 Apr 2017 10:36 AM

மதுப் பழக்கத்திலிருந்து இளைஞர்களை மீட்க மனநல ஆலோசகர்களை போதிய அளவில் தமிழக அரசு நியமிக்க வேண்டும்: கனிமொழி எம்பி வலியுறுத்தல்

மதுப்பழக்கத்திலிருந்து இளைஞர் களை மீட்க போதிய மனநல ஆலோசகர்களை அரசு நியமிக்க வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தி யுள்ளார்.

தற்கொலை தடுப்புக்கென உருவாக்கப்பட்ட சிநேகா அமைப் பின் 31-வது ஆண்டு தொடக்க விழா தேனாம்பேட்டையில் நேற்று நடைபெற்றது. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி இவ்விழா வில் பங்கேற்று பேசும்போது, “தற்கொலைக்கு முயன்றோர் தண்டிக்கப்படுவதை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று மாநிலங்களவையில் முதல் முறையாக நான்தான் குரல் கொடுத்தேன். இன்று அதற்கான சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் வேலையின்மை, தேர்வில் தோல்வி, வரதட்சணை கொடுமை, குடும்ப பிரச்சினை போன்றவை காரணமாக இளம் தலைமுறையினர் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்கின்றனர். இவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க போதிய பயிற்சியாளர்களை அரசு நியமிக்க வேண்டும். குறிப்பாக மதுப்பழக்கத்திலிருந்து இளைஞர் களை மீட்க போதுமான மனநல ஆலோசகர்களை அரசு நியமிக்க வேண்டும்” என்றார்.

ஏ.ஆர்.லட்சுமணன்

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் பேசும்போது, “தற்கொலைக்கு முயன்றோரை, இந்திய தண்டனை சட்டம் 309-வது பிரிவின்படி தண்டிக்கக் கூடாது என்று சிநேகா அமைப்பு தொடர்ந்து போராடி வந்தது. அதன் அடிப்படையிலேயே தேசிய சட்ட ஆணையத்தின் தலைவராக நான் இருந்தபோது, 309-வது சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என்று, மத்திய அரசுக்கு பரிந்துரைத்தேன். அந்த பரிந்துரை பல நிலைகளைக் கடந்து, தற்போது மனநல பாதுகாப்பு சட்டமாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள் ளது. இதில் சிநேகா அமைப்பின் முயற்சி வெற்றிபெற்றுள்ளது” என்றார்.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் முன்னாள் செயலர் கேஷவ் தேசிராஜூ, சிநேகா மைய நிறுவனர் லட்சுமி விஜயகுமார், தலைவர் நல்லி குப்புசாமி, இயக்குநர் காமாட்சி உள்ளிட்டோர் இதில் கலந்துகொண் டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x