ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறிதால் உலகின் 2-வது நிதி மையமான லண்டனுக்கு அச்சுறுத்தல்: டிபிஎஸ் வங்கியின் மண்டலத் தலைவர் தகவல்

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறிதால் உலகின் 2-வது நிதி மையமான லண்டனுக்கு அச்சுறுத்தல்: டிபிஎஸ் வங்கியின் மண்டலத் தலைவர் தகவல்
Updated on
1 min read

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியதால் உலகிலே 2-வது மிகப்பெரிய நிதி மையமாகத் திகழும் லண்டனுக்கு இப்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று டிபிஎஸ் வங்கியின் மண்டல தலைவர் அர்த்தநாரீஸ்வரர் தெரிவித்தார்.

உலக அரங்கில் அண்மையில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட விஷயங்களில் முக்கியமானது ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் விலகு வது என்ற வாக்கெடுப்பு முடிவாகும். இது, பிரெக்ஸிட் என்று அழைக்கப்படுகிறது. இந்த முடிவால் நிபுணர்களிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.

இந்நிலையில், சென்னையில் உள்ள லயோலா இன்ஸ்டிடியூட் ஆப் பிசினஸ் அட்மினிஸ்ரேஷன் (லிபா) சார்பில் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட் டன் வெளியேறியதால் ஏற்படும் பாதக அம்சங்கள் குறித்த நிபுணர் குழு கலந் துரையாடல் நேற்று நடந்தது.

சர்வதேச பேச்சாளர் ஜகந்தி வி.கே.மைத்ரேயா இந்த கலந்துரையாடலை நடத்தினார். ‘தி இந்து’ பத்திரிகையின் சர்வதேச விவகாரங்களுக்கான ஆசிரியர் ஸ்டான்லி ஜானி பேசும்போது, “இந்த விலகல் குறித்து நீண்டகாலமாகவே அரசியல் மட்டத்தில் பேச்சு இருந்து வந்தது. 1990-ம் ஆண்டுவாக்கில் ஏற்பட்ட நிதிச் சிக்கல் காரணமாக இந்த பேச்சு வலுவடைந்தது. ஐரோப்பிய யூனியனில் இருந்து புலம் பெயர்ந்தவர்களால் தங்க ளுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற மக்களின் அச்சத்தைப் பயன்படுத்தி இந்த விலகலை சாத்தியமாக்கிவிட்டனர்” என்றார்.

தென்னிந்திய கருவூலம் மற்றும் சந்தை, டிபிஎஸ் வங்கியின் மண்டலத் தலைவர் அர்த்தநாரீஸ்வரர் பேசுகையில், “இந்த விலகல் சர்வதேச வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் உள்ள முதலீட்டாளர்கள் இடர்பாடு இல் லாத இனங்களில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். பங்கு வர்த்தகத்தில் ஏற்பட்ட பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி வருகிறது. உலகில் நியூ யார்க்குக்கு அடுத்தபடியாக லண்டன்தான் 2-வது பெரிய நிதி மையகத் திகழ்கிறது. இப்போது அதற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. இந்த விலகலால் ஐரோப்பிய யூனியன் மட்டுமில்லாமல் பிரிட்டனின் வர்த்தகமும் பாதிக்கப்படலாம். ஆனால், இந்தியாவுக்கு பெரிய பாதிப்பு இருக்காது” என்றார்.

அச்சம் தொடரும்

பாதுகாப்பு பகுப்பாய்வு மைய உறுப்பினர் கீதா மாதவன் பேசும்போது, “பிரிட்டன் பாதுகாப்புக்கான பட்ஜெட்டை அதிகரிக்க வேண்டியதிருக்கும். உள் நாட்டு, வெளிநாட்டு அச்சுறுத்தலுக்கு ஆளாக நேரிடும். புலம்பெயர்ந்தவர்களால் தங்களது பொருளாதாரத்துக்கும், பாது காப்புக்கும் பாதிப்பு ஏற்படும் என்ற மக் களுக்குள்ள அச்சம் தொடரும்” என்றார்.

அதையடுத்து மாணவர்களின் சந்தேகங்களுக்கு நிபுணர்கள் பதில் அளித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in