ராமர் பாலத்தை இடிக்காமல் சேது திட்டத்தை நிறைவேற்றுவதில் உறுதி: நிதின் கட்கரி

ராமர் பாலத்தை இடிக்காமல் சேது திட்டத்தை நிறைவேற்றுவதில் உறுதி: நிதின் கட்கரி
Updated on
1 min read

ராமர் பாலத்தை இடிக்காமல் சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

சேது சமுத்திரக் கால்வாய் வழித்தடங்களை ஹெலிகாப்டர் மற்றும் ஹோவர்கிராப்ட் கப்பலிலும் மத்திய கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று (செவ்வாய்க்கிழமை) ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "சேது சமுத்திர கால்வாய் திட்டத்தைப் பொறுத்தவரை, ராமர் பாலத்தை இடிக்காமல் நிறைவேற்றுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

இதுதொடர்பான வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்காக நான்கைந்து மாற்று வழிகளை நாங்கள் வைத்திருக்கிறோம்.

சேது சமுத்திர திட்ட வழித்தடங்களை ஹெலிகாப்டர் மற்றும் ஹோவர்கிராப்ட் கப்பல் மூலம் ஆய்வு செய்தேன். இந்த ஆய்வு அறிக்கையை மத்திய அமைச்சரவையில் தாக்கல் செய்த பின்னர் முடிவெடுக்கப்படும்" என்றார்.

மத்திய அமைச்சரின் ஆய்வில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், சேது சமுத்திரத் திட்டத் தலைவர் அதுல்யா மிஸ்ரா, உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in