டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதியை நீட்டிக்க முத்தரசன் கோரிக்கை

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதியை நீட்டிக்க முத்தரசன் கோரிக்கை
Updated on
1 min read

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் 4-ம் பிரிவு பணியாளர்களுக்கான எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை வரும் 25-ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 4-ம் பிரிவு வரும் நவம்பர் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. இளநிலை உதவியாளர், வரி வசூலிப்பாளர், கள அளவையாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் ஆகிய பிரிவுகளில் 5 ஆயிரதது 451 இடங்களுக்கு தேர்வு நடைபெறவுள்ளது.

இதற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 8-ம் தேதி கடைசி நாளாகும். இத்தேர்வுக்கு இணைதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த 3 நாள்களாக தேர்வாணையத்தின் இணையதளம் செயல்படவில்லை. இதனால், ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பிக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கும் வகையில் இத்தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை வரும் 25-ம் தேதி வரை நீட்டித்து டிஎன்பிஎஸ்சி மறு அறிவிப்பு வெளியிட வேண்டும்'' என்று முத்தரசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in