கொரட்டூர் ஏரியை சுற்றி ஸ்கைரோனமஸ் பூச்சிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன: மாநகராட்சி அதிகாரி தகவல்

கொரட்டூர் ஏரியை சுற்றி ஸ்கைரோனமஸ் பூச்சிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன: மாநகராட்சி அதிகாரி தகவல்
Updated on
1 min read

கொரட்டூர் ஏரி அருகே உள்ள சீனிவாசபுரம் பகுதியில் ஸ்கைரோனமஸ் வகை பூச்சிகள் அதிக அளவில் உருவாகி, வீடுகளைத் தேடி வந்ததால், பொது மக்கள் அவதிக்குள்ளாகினர். இதை அறிந்த சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், செயலர் ஜெ.ராதா கிருஷ்ணன், மேயர் சைதை துரைசாமி, ஆணையர் தா.கார்த்திகேயன் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இது தொடர்பாக மாநகாரட்சி அதி காரி ஒருவர் கூறியதாவது: இப்பூச்சிகள் அதிக அளவில் பெருகியதற்கான கார ணங்கள் குறித்து கோவை வேளாண் பல்கலைக்கழக பூச்சியியல் துறை பேரா சிரியர் டேவிட் ஆய்வு மேற் கொண்டு, மாதிரிகளையும் சேகரித்து சென்றுள்ளார்.

கடந்த 4 நாட்களாக 60 கைத்தெளிப் பான்களில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகின்றன. 21 புகைப்பரப்பும் இயந்திரங்கள் மூலம் புகை அடிக்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் பிளீச்சிங் பவுடர்களும் தூவப்பட்டு வருகிறது. 2 பைபர் கட்டுமரம் மூலம் இப்பூச்சிகள் தங்குவதற்கு ஏதுவாக இருந்த ஆகாயத்தாமரை செடிகளை அப்புறப்படுத்தும் பணியிலும் 78 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கால்நடைத்துறை சார்பில், ஏரி நீரில் உள்ள பூச்சிகளின் முட்டைகள் மற்றும் லார்வாக்களை உண்டு, பூச்சிகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக 200 வாத்துகள் விடப்பட்டுள்ளன.

இது மட்டுமல்லாது, இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் பூச்சிகள் செல்லாதவாறு, அவற்றை ஈர்க்கும் விதமாக ஏரியைச் சுற்றி 300 டியூப் லைட்டுகள் மற்றும் 4 ஆயிரம் வாட்ஸ் திறன் கொண்ட 3 உயர் கோபுர மின் விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

கடிக்காத கொசு வகை

இந்த பூச்சிகள் கடிக்காத கொசு வகையை சார்ந்தது. இவை பார்ப்பதற்கு கொசுவை போன்று இருக்கும். ஆனால் இவை மனிதர்களை கடிப்பதில்லை. ரத் தத்தையும் உறிஞ்சுவதில்லை. ஆனால் இவை முகத்தின் மீது அமர்வது, வாக னத்தில் செல்வோரின் கண்களில் விழு வது, சுவாசிக்கும்போது, வாய் மற்றும் மூக்கினுள் நுழைந்துவிடுவது போன்ற இடையூறுகளை ஏற்படுத்தும். மாநக ராட்சியின் பல்வேறு நடவடிக்கையால் அப்பகுதியில் ஸ்கைரோனமஸ் பூச்சிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in