Published : 02 Aug 2016 07:44 AM
Last Updated : 02 Aug 2016 07:44 AM

உறுப்பினர்கள் பேசி முடித்த பின்னரே அமைச்சர்கள் பதிலளிக்க அனுமதிக்க வேண்டும்: பேரவையில் துரைமுருகன் கோரிக்கை

உறுப்பினர்கள் முழுமையாக ஒரு வாக்கியத்தை பேசியதும் அமைச்சர்களை பதிலளிக்க அனுமதிக்க வேண்டும் என பேரவைத் தலைவரிடம் துரைமுருகன் கோரிக்கை விடுத் தார்.

சட்டப்பேரவையில் நேற்று கூட்டுறவு, உணவுத்துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. இதில், சேலம் வடக்கு தொகுதி திமுக உறுப் பினர் ஆர்.ராஜேந்திரன் பேசும் போது, கூட்டுறவு மற்றும் உணவுத் துறையில் பல்வேறு திட்டங்கள் திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டதாக தெரிவித்தார்.

அப்போது, அமைச்சர் ஆர்.காமராஜ் எழுந்து பதிலளிக்க முற்பட்டார். உறுப்பினர் முழுவது மாக பேசி முடித்ததும் அமைச்சர் பதிலளிக்கலாம் என திமுகவினர் கூறினர். ஆனால், பேரவைத் தலைவர் பி.தனபால் இதை ஏற்கவில்லை.

பேரவை தலைவர் பி.தனபால்:

அமைச்சர்கள் குறுக்கிட்டு விளக் கம் அளிப்பதை தடுக்க முடியாது. அவர்கள் பேச வாய்ப்பளிக்க வேண்டும்.

திமுக துணைத் தலைவர் துரைமுருகன்:

அமைச்சர்கள் பதி லளிப்பதை தடுக்க முடி யாது. ஆனால், உறுப்பினர்கள் முழுமையாக ஒரு வாக்கியத்தை முடித்த பின்னர் அமைச்சர்கள் பதிலளிக்கலாம். இதற்கு நீங்கள் அனுமதிக்க வேண்டும். நாங்கள் உங்களிடம்தானே இதை கூற முடியும்.

பேரவைத் தலைவர்:

யோசனை செய்து பேசுங்கள். இங்கு இப்படி பேசிவிட்டு வெளியில் சென்று வேறு மாதிரி பேசுகிறீர்கள்.

துரைமுருகன்:

நாங்கள் வெளியில் சென்றதும், ஸ்டா லினும் துரைமுருகனும் மற்ற உறுப்பினர்களை தூண்டி விடுவ தாக கூறுகிறீர்கள்.

பேரவைத் தலைவர்:

நடந் ததைத்தான் கூறினேன். நடக் காததை கூறவில்லை.

இவ்வாறு விவாதம் நடந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x