அட்சய திரிதியைக்காக பல நிறங்களில் நகைகள் விற்பனை

அட்சய திரிதியைக்காக பல நிறங்களில் நகைகள் விற்பனை
Updated on
1 min read

அட்சய திரிதியை தினத்தை முன்னிட்டு வாடிக்கையாளர் களை கவரும் வகையில் சிவப்பு, பச்சை நிறங்களில் முதல்முறையாக புதிய வடிவ மைப்புடன் கூடிய நகைகள் விற்பனைக்கு வர உள்ளன.

அட்சய திரிதியை தினத்தில் தங்கம் வாங்கினால், குடும் பத்தில் செல்வம் அதிகரிக்கும் என்பது மக்களின் நம்பிக்கை யாக இருக்கிறது. வரும் 28, 29-ம் தேதிகளில் அட்சய திரி தியை வருகிறது. இதனால், பாரம்பரிய மற்றும் புதிய வடிவமைப்பு நகைகள் உற் பத்தி பணிகள் கடந்த ஒரு மாதமாக அதிகளவில் நடை பெற்று வருகின்றன.

இது தொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரி கள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.சாந்தகுமார் ‘தி இந்து’விடம் கூறுகையில், ‘‘வழக்கமாக தங்க நகைகள் மஞ்சள் நிறத்தில்தான் இருக்கும். தற்போது மக்களின் ரசனையும் மாறி வருகிறது. எனவே, இந்த ஆண்டில் அட்சய திரிதியை தினத்தையொட்டி முதல்முறையாக பச்சை, வெள்ளை, இளம்சிவப்பு, சிவப்பு உள்ளிட்ட நிறங்களில் நகைகள், மோதிரங்கள், சையின் கள் என 500-க்கும் மேற்பட்ட வடிவமைப்புகளில் நகைகளை தயாரித்து விற்பனை செய்ய வுள்ளோம். எடையும், விலையும் குறைவாக இருப்பதால் இளம் பெண்களைக் கவரும் ‘லைட் வெயிட்’ நகைகளும் இதில் இடம் பெறும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in