

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று காலை தனது குடும்பத்தாருடன் கோவையில் இருந்து ஹெலி காப்டர் மூலம் உதகை வந்தார்.
உதகை ராஜ் பவனில் மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் அவரை வரவேற்றார். திடீரென மாலை மீண்டும் அவர் உதகையில் இருந்து திரும்பினார்.
அவர் உதகையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவை சென்று, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றதாக போலீஸார் தெரிவித்தனர்.
ஆளுநரின் குடும்பத்தினர் தற்போது ராஜ் பவனில் தங்கி உள்ளனர்.