

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் உத்தரவாதங்களுடன் கூடிய அறிக்கையையும் மீறி ஜல்லிக்கட்டு நடத்தும் வரை போராட்டம் தொடரும் என்று போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.
நாளை காலை டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்து ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் இயற்ற வலியுறுத்தவுள்ளதாக அறிக்கையில் தெரிவித்திருந்தார். மேலும் இளைஞர்கள் போராட்டத்தை கைவிடவும் வலியுறுத்தினார்.
இந்த அறிக்கையை மைலாப்பூர் காவல்துறை துணை ஆணையர் பாலகிருஷ்ணன் வாசித்துக் காட்டினார்.
ஆனால் முதல்வரின் அறிக்கையை ஏற்க மறுப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர். அவர் பிரதமரைச் சந்தித்து ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெறும் வரை போராட்டம் தொடரும் என்று என்று உறுதிபட தெரிவித்துள்ளனர்.
மேலும், உச்ச நீதிமன்றம், மத்திய அரசிடமிருந்து ஜல்லிக்கட்டு அனுமதி உத்தரவு வர வேண்டும், நாங்கள் பின்வாங்கப்போவதில்லை என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.