

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (13-ம் தேதி) முதல் 17-ம் தேதி வரை வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு செயற்குழுக் கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. கூட்டமைப்புத் தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். செயலாளர் மணி, பொருளாளர் ரகுநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பரமசிவம் கூறியதாவது:
உயர் நீதிமன்றம் பிறப்பித் துள்ள வழக்கறிஞர்களுக்கான புதிய உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி 13-ம் தேதி (இன்று) தொடங்கி 17-ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடு வது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வரும் 19-ம் தேதி கூட்டமைப் பின் பொதுக்குழுக் கூட்டம் சேலத் தில் நடைபெறும். அதில், நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தை மீண்டும் தொடர்வது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். இப்போராட்டத்தால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர் வாகிகள் தேர்தலை ஒரு மாதத் துக்கு தள்ளிவைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே, சேலம் வழக்க றிஞர்கள் சங்க அவசர செயற் குழுக் கூட்டம் சேலத்தில் சங்கத் தலைவர் பொன்னுசாமி தலைமை யில் நடந்தது. செயலாளர் ஐயப்ப மணி, பொருளாளர் தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச் சேரி வழக்கறிஞர்கள் கூட்ட மைப்பின் தீர்மானங்களை ஏற்றுக்கொள்வது எனவும், வரும் 17-ம் தேதி தமிழகத்தில் உள்ள வழக்கறிஞர்களை சேலத்தில் ஒன்றுதிரட்டி, சேலம் ஆட்சி யர் அலுவலகத்தில் இருந்து நீதிமன்றம் வரை பேரணி நடத் துவது என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.