Last Updated : 28 Jul, 2016 10:06 AM

 

Published : 28 Jul 2016 10:06 AM
Last Updated : 28 Jul 2016 10:06 AM

தமிழக முதல்வர் பார்வையிட்ட பின்னர் மொரீஷியஸில் வள்ளுவர் சிலை

தஞ்சாவூர் தமிழ்த்தாய் அறக் கட்டளை சார்பில் மொரீஷியஸ் நாட்டில் நிறுவுவதற்காக திரு வள்ளுவர் சிலையொன்று வடி வமைக்கப்பட்டது.நாகர்கோயில் மயிலாடியிலுள்ள நல்லதாணு சிற்பக்கூடத்தில் கருங்கல்லால் வடிவமைக்கபட்ட இந்த திரு வள்ளுவர் சிலை 4 அடி உயரமும், 2000 கிலோ எடையும்கொண்டது.

இந்த திருவள்ளுவர் சிலை கடந்த 15-ஆம் தேதி கன்னியா குமரியிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, திருநெல்வேலி, விருது நகர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கடலூர், காஞ்சிபுரம் வழியாக சென்னையை வந்தடைந்தது.

வரும் செப்டம்பர் 15-ம் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி மொரீஷிய ஸில் நடைபெறும் விழாவின் போது, இந்த திருவள்ளுவர் சிலையை மொரீஷியஸ் நாட்டின் துணை அதிபர் பாலன் வையாபுரி திறந்துவைக்க உள்ளார்.

இதுகுறித்து திருவள்ளுவர் சிலை அமைப்புக்குழுவின் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து கூறியதாவது:

தமிழர்களின் வாழ்வியல் பண் பாட்டுச் சிறப்புகளை உலகுக்கு பறைசாற்றி வரும் பெருமை யுடையது திருக்குறள். மொரீஷி யஸ் நாட்டின் மோக்கா நகரிலுள்ள மகாத்மா கல்வி நிறுவனத்தில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ் படிக்கிறார்கள். அந்நிறுவன வளாகத்தில் திருவள்ளுவர் சிலையை வைப்பது பெருமைக் குரியது என்றார்.

தமிழ்த்தாய் அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் உடையார் கோயில் குணா ’தி இந்து’விடம் கூறியதாவது:

“ஏறக்குறைய 2000 ஆண்டு காலத்துக்கு முன்பு எழுதப்பட்டது திருக்குறள். இன்றைய காலத் துக்கும் ஏற்புடைய நல்ல பல அறநெறி கருத்துகளை எழுதிய திருவள்ளுவருக்கு உலகின் பல பகுதிகளிலும் சிலை அமைக்க முடிவு செய்தோம்.மொரீஷியஸ் நாட்டிலுள்ள பேராசிரியர்கள் திருமலை செட்டி, கேசவன் சொர்ணம், கதிர்வேல் சொர்ணம், பன்னாட்டுக் கல்வி யாளர் ந.நடராசப் பிள்ளை ஆகியோரின் முன்முயற்சியில், அந்நாட்டின் அனுமதி பெற்று, அங்குள்ள காந்தி கல்வி நிறு வனத்தில் வள்ளுவர் சிலையை நிறுவ உள்ளோம்.

இந்த திருவள்ளுவர் சிலை ஊர்வலம் வரும்வழியில் கல்லூரி கள், பள்ளிகளின் மாணவ மாணவிகள் மற்றும் தமிழறிஞர் கள், பொதுமக்கள் பார்வைக்கும் வைக்கப்பட்டது. இதுவரை சுமார் 5 லட்சம் தமிழ் மக்கள் வள்ளுவர் சிலையினை வழிபட்டு உள்ளனர்.சென்னைக்கு வருகை தந்த இந்த திருவள்ளுவர் சிலையை பார்வையிட, தமிழக முதல்வர், தமிழக ஆளுநர் ஆகியோருக்கு முன்பே முறைப்படியான கடிதங்க ளைக் கொடுத்துள்ளோம். உலகத் தமிழர்களின் அடையாளமாக மொரீசியஸ் நாட்டில் நிறுவப்பட இருக்கும் இந்த திருவள்ளுவர் சிலை தமிழக முதல்வர் பார்வை யிட்ட பிறகுதான் மொரீசியஸ் அனுப்ப உள்ளோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x