

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதனின் உடல் தகனம் இன்று டெல்லியில் நடக்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.பி.பரதன் (92) உடல்நலக் குறைவு காரணமாக நேற்றுமுன்தினம் டெல்லி மருத்துவமனையில் கால மானார். டெல்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்கு பரதனின் உடல் இன்று வைக்கப் படுகிறது. பல்வேறு கட்சி தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்துகின்றனர்.
இதுகுறித்து இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா கூறும்போது, “ஏ.பி.பரதனின் உடல் நாளை (இன்று) காலை 10 மணிக்கு கட்சி தலைமை அலுவலகத்துக்கு கொண்டு வரப் படும். அவரது உடலுக்கு இடது சாரி கட்சி தலைவர்கள், தொண்டர் கள், மற்ற கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்து வார்கள்.
அதன்பின், பிற்பகல் 3 மணிக்கு டெல்லியில் மின் தகன மேடையில் தகனம் செய்யப்படும். பரதனின் மகன் அசோக், மகள் அல்கா பரூவா உட்பட குடும்ப உறுப் பினர்கள் ஏற்கெனவே டெல்லி வந்துவிட்டனர்” என்றார்.