இறுதிக்கட்ட பணியில் போரூர் மேம்பாலம்: இந்த மாதம் இறுதியில் திறக்க திட்டம்

இறுதிக்கட்ட பணியில் போரூர் மேம்பாலம்: இந்த மாதம் இறுதியில் திறக்க திட்டம்
Updated on
1 min read

கடந்த 7 ஆண்டுகளாக நடந்து வரும் போரூர் மேம்பாலப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இம்மாதம் இறுதியில் மக்களின் பயன்பாட்டுக்கு இப்பாலம் திறக்கப் படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வடபழனி, குன்றத்தூர், பூந்த மல்லி, கிண்டி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் லட்சக்கணக்கான வாக னங்கள் போரூர் ரவுன்டானா வழியாகச் செல்கின்றன. இதனால், போரூர் சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், இருபுறமும் தலா 7.5 மீட்டரில் சர்வீஸ் சாலை யுடன், 480 மீட்டர் நீளம், 37.2 மீட் டர் அகலத்துக்கு ரூ.34.72 கோடி யில் மேம்பாலம் அமைக்க திட்ட மிடப்பட்டது. சென்னைப் பெருநகர நெடுஞ்சாலைத் துறை சார்பில் கடந்த 2010 பிப்ரவரியில் பாலம் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டது.

இந்த வழியாக செம்பரம்பாக்கத் தில் இருந்து தென் சென்னைக்குச் செல்லும் பெரிய குடிநீர் குழாய் களை, வேறு வழிக்கு மாற்ற ரூ.5.5 கோடியில் பணிகள் நடந்த தால் மேம்பால கட்டுமானப் பணி முடங்கியது. இதனால் காலை, மாலை நேரங்களில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டுவந்தது. சாலையில் ஏற்பட்ட மேடு, பள்ளங் களால் வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டியிருந்தது. காற்றில் தூசி, புகை பரவியதால் அப்பகுதி மக்களுக்கு சுவாசம் தொடர்பான நோய்கள் ஏற்பட்டன.

இதற்கிடையே, அப்பகுதியை சேர்ந்த குடியிருப்போர் சங்கங்கள், அரசியல் கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தியதை அடுத்து, கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் மீண்டும் பணிகள் தொடங் கப்பட்டன. பின்னர், படிப்படியாக பணிகள் முடிக்கப்பட்டு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இது தொடர்பாக நெடுஞ்சாலைத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘நிலம் கையகப் படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினை மற்றும் குடிநீர் குழாய் இணைப்பு பணிகளால் காலதாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு இந்த மேம்பால பணி வேகமெடுத்து தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 2 வாரங்களில் ஒட்டு மொத்த பணிகளையும் முடித்து அரசிடம் ஒப்படைக்கவுள்ளோம். எனவே, இந்த மாதம் இறுதிக்குள் இந்த பாலம் திறக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in