கடலோர மாவட்டங்களில் கடல்பாசி பயிரிட மீனவ மகளிர் குழுவினருக்கு ரூ.4.50 லட்சம்: புதிய திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்

கடலோர மாவட்டங்களில் கடல்பாசி பயிரிட மீனவ மகளிர் குழுவினருக்கு ரூ.4.50 லட்சம்: புதிய திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்
Updated on
1 min read

தமிழகத்தின் 13 கடலோர மாவட்டங்களில் கடல்பாசி பயிரிடும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து நிதியுதவி வழங்கினார்.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தின் கடற்பகுதி களில் கடற்பாசிகள் அதிகளவில் காணப்படுகின்றன. இந்த கடற் பாசிகளில் இருந்து ‘கராகீனன்’ என்ற மாவுப்பொருள் தயாரிக் கப்படுகிறது. உணவு, ரசா யனம், மருந்து மற்றும் அழகு சாதனத் தயாரிப்பு பொருட்களிலும் ஐஸ்கிரீம், பற்பசை தயாரிப்பிலும் இது பயன்படுத்தப்படுகிறது.

விவசாய பயிர்களுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துகளும் கடற்பாசியில் இருப் பதால் இதை விவசாயிகள் இயற்கை உரமாகவும் பயன் படுத்துகின்றனர். இதன் உற் பத்தி இந்தியாவில் குறைவாக இருப்பதால் ஆண்டுக்கு 1,500 டன் கராகீனன், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் படுகிறது.

தமிழகத்தில் கடற்பாசி உற் பத்தியை அதிகரிக்க திட்டமிடப் பட்டுள்ளது. இதற்காக கடலோர மாவட்டங்களில் ஆழம் குறைந்த கடற்பகுதிகளில் கடற்பாசி பயிரிடப்படும். இது முற்றிலும் மீனவ மகளிர் குழுக்கள் மூலம் ஒப்பந்த முறையில் நாட்டிலேயே முன்னோடி திட்டமாக செயல் படுத்தப்படுகிறது.

மீனவ மகளிர் வாழ்வாதா ரத்தை உயர்த்தும் வகையில், தமிழகத்தின் கடலோர மாவட்ட கடற்பகுதிகளில் கடற்பாசி பயிரிடும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத் தார். தூத்துக்குடி மாவட்டம் புன்னகாயல் கிராமத்தைச் சேர்ந்த 5 மீனவ மகளிர் குழுக்களுக்கு ரூ.22 லட்சத்து 50 ஆயிரம் நிதியுதவியும் வழங் கினார். ஒவ்வொரு குழுவுக் கும் ரூ.4.50 லட்சம் வழங்கப் படுகிறது. இதில் தமிழக அரசின் மானியம் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம். மீதமுள்ள ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் பாங்க் ஆப் இந்தியா மூலம் கடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கடற்பாசி பயிரிடும் திட்டத் துக்கு தேவையான விதைகளை வழங்கவும், அதை விற்கவும் திட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது, ஒவ்வொரு குழுவும் 5 மூங்கில் மிதவைகள் மூலம் 60 கிலோ விதை பயிரிட்டு, 46-வது நாளில் 260 முதல் 300 கிலோ கடற்பாசியை அறுவடை செய்யலாம். இதற்கான தொழில்நுட்ப உதவியை தமிழ் நாடு மீன்வளக் கல்லூரி வழங் கும். வளர்க்கப்படும் கடற் பாசியை தனியார் நிறுவனங் கள் வாங்கவும் வகை செய்யப் பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கள் டி.ஜெயக்குமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி, பி.பால கிருஷ்ண ரெட்டி, தலைமைச் செயலர் பி.ராமமோகன ராவ், மீன்வளத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, பேங்க் ஆப் இந்தியா பொது மேலாளர் குல்பூஷன் ஜெயின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in