

பழங்கற்காலம், இடைக் கற்காலம், புதிய கற்காலம், பெருங்கற்காலம் ஆகியவற்றை உள்ளடக்கியது முந்தைய வரலாற்றுக் காலம். இடைக் கற்காலம், புதிய கற்காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வியல் முறைகளுக்குச் சான்றாக விளங்குவது, பாறை ஓவியங்கள் மற்றும் வேட்டைக் கருவிகள். பெருங்கற்காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வியலில் புதைகுழி கலாச்சாரம் முக்கி யத்துவம் வாய்ந்ததாகக் கருதப் படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் தெங்கு மரஹாடா, மசினகுடி, கோத்தகிரி, ஏக்குணி, நீர்காய்ச்சிமந்து ஆகிய பகுதிகள் வரலாற்றுப் பதிவுகளை உள்ளடக்கியவை. 1873-ம் ஆண்டு, அப்போதைய கமிஷனராக இருந்த பிரீக்ஸ் என்ற ஆங்கிலேயர், முதல்முதலாக பெருங்கற்கால புதைகுழிகளில் இருந்த சுடுமண் சிற்பங்கள், கலைப் பொருட்களைக் கண்டறிந்தார். அவரால் சேகரிக் கப்பட்ட புராதன கலைப் பொருட் கள் சென்னை அரசு அருங் காட்சியகத்திலும், லண்டன், பெர் லின் ஆகிய பிரபல சர்வதேச அருங்காட்சியகங்களிலும் பாது காக்கப்பட்டு வருகின்றன.
பெருங்கற்கால மக்கள், விலங்குகளின் உருவங்களுடன் நீலகிரி மாவட்டத்தில் ஈம பானைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக உதகை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சி.சிவகுமார் கூறியதாவது:
பெருங்கற்காலத்தில் சடலத்தை புதைக்கும்போது, அதனுடன் கால்நடைகள், சுடுமண் சிற்பங்கள் மற்றும் பல்வேறு பொருட்களைப் பானைகளில் போட்டு புதைத்தனர். இவற்றை, இறந்தவர்கள் பயன் படுத்துவார்கள் என்பது அவர்களின் ஐதீகம். இத்தகைய பானைகளை ஈம பானைகள் என்கிறோம்.
தமிழகத்தின் பிற பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட ஈம பானைகள் பெரிய அளவிலான பானைகளாக மட்டுமே வடிவமைக்கப்பட்டிருந் தன. ஆனால், நீலகிரி மாவட்டத்தில் மட்டுமே ஈம பானைகளின் மூடிகளில் எருமை, குதிரை ஆகிய விலங்குகளின் உருவங்களோடு, ஒட்டகச்சிவிங்கியின் உருவத் தையும் வடிவமைத்துள்ளனர்.
விலங்குகளைப் பார்த்திருந் தால்தான் உருவங்களை வடி வமைத்திருக்க முடியும் என் பதால், நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்த பெருங்கற்கால மனிதர் கள் ஒட்டகச்சிவிங்கியை பார்த் திருக்க வேண்டும்.
இந்த ஈம சட்டிகளை இரண்டு மற்றும் மூன்று அடுக்குகளாகச் செய்துள் ளனர். இங்கு கண்டெடுக்கப்பட்ட ஈம பானைகள், அரசு அருங் காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
மூங்கில் ஆவணம்
பழங்காலத்தில் ஆவணங்கள் பனை ஓலைகளில் எழுதி பாது காக்கப்பட்டு வந்தன. அத்தகைய பனை ஓலைகள் பல்வேறு அருங் காட்சியகங்களில் பாதுகாக்கப் படுகின்றன. உதகை அரசு அருங் காட்சியகத்தில் ஓலைகள் மட்டு மின்றி, மூங்கிலில் எழுதப்பட்ட ஆவணங்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மூங்கில்களில் மலை யாள மொழியில் எழுதப்பட்டுள்ளது. எழுதப்பட்டுள்ள விவரம் மற்றும் அதன் காலம் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.