Published : 16 Oct 2014 10:54 AM
Last Updated : 16 Oct 2014 10:54 AM

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: பொதுமக்கள் பார்க்கலாம்

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத் தில் சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகளின், வரைவு வாக்காளர் பட்டியல் வெளி யிடும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் வி.கே.சண்முகம் தலைமையில், அனைத்து கட்சி நிர்வாகிகளின் முன் னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடை பெற்றது.

இதில் 11 சட்டமன்ற தொகுதிக ளில் 16,30,977 ஆண் வாக்காளர் களும் 16,23,334 பெண்வாக்காளர்க ளும் மற்றும் 124 இதர வாக்காளர் களும் உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும், வரும் 17 அல்லது 30-ம் தேதி மாவட்டத்தில் உள்ள 633 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபா கூட்டம் நடத்தி, வாக்காளர் பட்டியலின் விவரங் களை கிராம மக்களுக்கு தெரி வித்து, ஆலோசனை பெற ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 26 மற்றும் நவம்பர் 2 ஆகிய விடுமுறை நாட்களில் அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடி மையங்களில், தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப் பங்களை பெற நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது.

கடந்த லோக்சபா தேர்தலின் போது, மாவட்டம் முழுவதும் 3,452 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது, பல்வேறு பகுதியில் புதிய வாக்குச் சாவடி மையங்கள் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் வலி யுறுத்தினர். இதன்பேரில், மாவட்டம் முழுவதும் தேர்தல் அதிகாரிகள் ஆய்வு நடத்தி, புதிதாக 309 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர்கள் விவரம் வருமாறு:

காஞ்சிபுரத்தில் 2,78,263 பேரும் உத்திரமேரூரில் 2,27,431 பேரும் மதுராந்தகம் (தனி) 2,04,941, செய்யூர் (தனி) 1,97,473, திருப்போரூரில் 2,30,710, செங்கல்பட்டில் 3,34,589, தாம்பரத்தில் 3,38,135, பல்லாவரத் தில் 3,64,988, ஸ்ரீபெரும் புதூர்(தனி) 2,62,093 பேரும் ஆலந்தூரில் 3,08,760 பேரும் சோழிங்கநல்லூரில் 5,07,052 பேரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 28,67,720 வாக்காளர்கள்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை நேற்று மாலை வெளியிட்டு மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்ததாவது:

வரைவு வாக்காளர் பட்டியல், 2014-ன்படி, திருவள்ளூர் மாவட் டத்தில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளில் உள்ள மொத்த வாக்காளர்கள் 28 லட்சத்து 67 ஆயி ரத்து 720 பேர். இதில், 14 லட்சத்து 40 ஆயிரத்து 628 ஆண்கள், 14 லட்சத்து 26 ஆயிரத்து 621 பெண்கள், இதர வகையினர் 471 பேர் இடம் பெற்றுள்ளனர்.

1,100 பள்ளிகளில் பொது மக்களின் பார்வைக்காக வரைவு வாக்காளர் பட்டியல் - 2014 வைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x