Published : 07 Mar 2017 09:48 AM
Last Updated : 07 Mar 2017 09:48 AM

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தண்ணீர் தட்டுப்பாடால் மின் உற்பத்தி நிறுத்தம்: 2 அலகுகளில் மட்டுமே மின் உற்பத்தி

தூத்துக்குடி அனல்மின் நிலைய 4-வது அலகில் நேற்று காலை மின் உற்பத்தி தொடங்கியது. மொத்தமுள்ள 5 அலகுகளில் 2 அலகுகளில் மட்டுமே மின் உற்பத்தி நடைபெறுகிறது. தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக 3 அலகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி அனல்மின் நிலை யத்தில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 5 அலகுகள் மூலம் 1050 மெகாவாட் மின்சாரம் உற் பத்தி செய்யப்படும். மின் உற்பத் திக்கு சுத்தமான தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. வறட்சி காரண மாக தாமிரபரணி ஆற்றிலிருந்து தூத்துக்குடி அனல்மின் நிலையம் உள்ளிட்ட தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்டு வந்த தண்ணீரை மாவட்ட நிர்வாகம் கடந்த ஜனவரி 7-ம் தேதி முதல் நிறுத்தியது.

இதனால் அனல்மின் நிலையம் முழுமையாக இயங்க முடியாத சூழல் உருவானது. அருகிலுள்ள என்டிபிஎல் அனல்மின் நிலையத்தில் செயல்படும் கடல்நீரை குடிநீராக் கும் ஆலையில் இருந்து தண்ணீர் பெற்றும், டேங்கர் லாரிகள் மூலம் வாங்கியும் அனல்மின் நிலையத் தில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக அனல்மின் நிலையத்தில் கடந்த சில நாட்களாக மூன்றாவது அலகு மட்டுமே செயல்பட்டு வந்தது. இதனால் 840 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

4-வது அலகு இயங்கியது

இந்நிலையில் 4-வது அலகில் நேற்று அதிகாலை 3.25 மணியளவில் மின் உற்பத்தி தொடங்கியது. இதன் மூலம் மின் உற்பத்தியின் அளவு 420 மெகாவாட்டாக உயர்ந் துள்ளது. தண்ணீர் தட்டுப்பாட்டை போக்குவது தொடர்பாக வல்லுநர் குழுவினர் ஆய்வு செய்து சென்றுள் ளனர். எனவே, விரைவில் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு 5 அலகுகளிலும் முழு அளவில் மின் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆட்சியர் தகவல்

இப்பிரச்சினை குறித்து தூத்துக் குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக் குமார் கூறும்போது,

``தாமிரபரணி ஆற்றில் இருந்து 20 எம்ஜிடி திட்டத்தில் அனல்மின் நிலையத்துக்கு மட்டும் தண்ணீர் கொண்டு செல்ல முடியுமா என ஆய்வு செய்யப்பட் டுள்ளது. தூத்துக்குடி அனல்மின் நிலையத்துக்கு தண்ணீர் வழங்கு வது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக அரசுதான் முடிவு செய்ய வேண்டும்” என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x