நீதிபதி கர்ணன் தொடர்ந்து 5-வது நாளாக தலைமறைவு: சென்னையில் கொல்கத்தா போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை

நீதிபதி கர்ணன் தொடர்ந்து 5-வது நாளாக தலைமறைவு: சென்னையில் கொல்கத்தா போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை
Updated on
2 min read

நீதிபதி கர்ணன் தொடர்ந்து 5-வது நாளாக தலைமறைவாக இருப்பதால் அவரை பிடிக்க கொல்கத்தா போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள அவரது உறவினர்கள், நண்பர்களின் வீடுகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.கே.கவுல் உட்பட பல்வேறு நீதிபதிகள் மீது நீதிபதி கர்ணன் ஊழல் புகார் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தியது. இதையடுத்து, தற் போது கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ள கர்ணனுக்கு மனநலப் பரிசோதனை நடத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான அமர்வு சமீபத்தில் உத்தரவிட்டது. அதற்கு பதிலடியாக தலைமை நீதிபதி கேஹர் உள்ளிட்டோருக்கு மனநலப் பரிசோதனை நடத்த கர்ணன் உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில், எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத் தின் கீழ் தலைமை நீதிபதி கேஹர் மற்றும் 6 நீதிபதிகளுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து கர்ணன் கடந்த 8-ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். அதைத் தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவரை கைது செய்து 6 மாதம் சிறையில் அடைக்க கொல் கத்தா காவல் துறைக்கு உச்ச நீதிமன்றம் 9-ம் தேதி உத்தரவிட்டது.

இதற்கிடையே, 9-ம் தேதி காலை சென்னை வந்த கர்ணன், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை யில் தங்கியிருந்தார். அவரை கைது செய்ய மேற்குவங்க டிஜிபி சுரஜித்கர் புர்கயஸ்தா தலைமையிலான தனிப்படை போலீஸார், 10-ம் தேதி காலை விமானத்தில் சென்னை வந்த னர். இதை அறிந்த கர்ணன், மதுரையைச் சேர்ந்த வழக்கறி ஞர் ஒருவரது காரில் 9-ம் தேதி நள்ளிரவு புறப்பட்டுச் சென்றுவிட் டார். அவர் ஆந்திர மாநிலம் காள ஹஸ்தி, தடா ஆகிய பகுதிகளுக் குச் சென்றிருக்கலாம் என்ற சந் தேகத்தில் கொல்கத்தா போலீ ஸாருடன் இணைந்து தமிழக போலீ ஸாரும் ஆந்திரா சென்றனர். ஆனால், அவரைப் பற்றி எந்த தக வலும் தெரியாததால், சென்னை திரும்பினர்.

சென்னை சூளைமேடு சவுராஷ் டிரா நகர் முதல் தெருவில் கர்ண னின் மகன் சுகன் (37) வசிக் கிறார். அவரிடமும், அவரது கார் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தப் பட்டது. சென்னையில் உள்ள உறவினர்கள் அல்லது நண்பர்கள் வீட்டில் கர்ணன் தலைமறைவாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதனால், தமிழக போலீஸாரின் உதவியுடன் சென்னை முழுவதும் கொல்கத்தா போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். ஆனால், 5-வது நாளாக தலைமறைவாக இருக்கும் கர்ணன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடிய வில்லை. அவரது உறவினர்கள், நண்பர்களின் வீடுகளை போலீ ஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவருடன் இருந்த மதுரை வழக்கறிஞர் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, கர்ணனுக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை மறுபரிசீலனை செய்யக் கோரி அவரது சார்பில் வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கும் இன்னும் விசா ரணைக்கு எடுத்துக் கொள் ளப்படவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in