ஓபிஎஸ் அணியுடனான பேச்சுவார்த்தைக்கு குழு அமைக்க முதல்வர் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை

ஓபிஎஸ் அணியுடனான பேச்சுவார்த்தைக்கு குழு அமைக்க முதல்வர் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை
Updated on
1 min read

அதிமுகவின் இரு அணிகளையும் இணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைக்குக் குழு அமைப்பது குறித்து, முதல்வர் மூத்த அமைச்சர்களுடன் அதிமுக தலைமைச் செயலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார்.

அதிமுக அம்மா அணியினர் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று கூறி வரும் நிலையில், ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியினர் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே பேச்சு என்று முட்டுக்கட்டை போடுகின்றனர்.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு,

மத்திய அரசிடம் பரிந்துரைக்க வேண்டும். சசிகலா, தினகரன் உள்ளிட்ட அவர்களின் குடும்பத்தினர் 30 பேரையும் கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற இரு கோரிக்கைகளிலும் ஓபிஎஸ் அணி உறுதியாக உள்ளது.

சிபிஐ விசாரணை தேவை என்ற அதிமுக அம்மா அணியின் கோரிக்கை குறித்து, எடப்பாடி பழனிசாமி இதுவரை கருத்துக் கூறவில்லை.

முதல்வர்- மூத்த அமைச்சர்கள் சந்திப்பு

பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைச் செயலகத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மூத்த அமைச்சர்களைச் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்த சந்திப்பில், ஓபிஎஸ் அணியுடன் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட குழு அமைப்பது பற்றி விவாதித்தார் என்று கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in