வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
Updated on
1 min read

வெப்ப சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறும்போது, “தமிழகம், புதுச்சேரியில் வெப்ப சலனம் காரணமாக நாளை (இன்று) மழையோ, இடியுடன் கூடிய மழையோ ஓரிரு இடங்களில் பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in