

மின் வாரிய உதவிப் பொறியாளர் எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள் மின் வாரிய இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது.
இது தொடர்பாக மின் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 375 உதவிப் பொறியாளர்கள் பணியிடங்களுக்கு, அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக எழுத்துத் தேர்வு கடந்த ஜனவரி 2016-ல் நடத்தப்பட்டது. அதன் மதிப்பெண்கள் www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்ற இறுதி ஆணை பெறப்பட்ட பின், தமிழக அரசால் நிர்ணயம் செய்யப் பட்டுள்ள ஒதுக்கீட்டின்படி தேர்வர் கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக் கப்படுவர்.