

ரஜினிகாந்தின் உருவ பொம்மை எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட் டுள்ளது.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ரஜினிகாந்த் தமிழக அரசிய லுக்குள் வரக்கூடாது என்று கூறி தமிழர் முன்னேற்றப் படையினர் கத்தீட்ரல் சர்ச் அருகே நேற்று முன்தினம் அவரது உருவ பொம்மையை எரித்தனர். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், ரஜினியின் வீடு எந்நேரத்திலும் முற்றுகை யிடப்படலாம் என்று உளவு மற்றும் நுண்ணறிவுப் பிரிவு போலீஸார், சென்னை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாத னுக்கு தகவல் அனுப்பினர். இதைத் தொடர்ந்து ரஜினிகாந் தின் வீட்டுக்கு போலீஸ் பாது காப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரோந்து போலீஸாரும் பாது காப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.