

இந்திய அரசியலமைப்புச் சட்டத் தின் 365-வது பிரிவைப் பயன்படுத்தி பெங்களூர், அதைச் சுற்றியுள்ள பகுதிகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழர்களுக்கு எதிரான வன்முறை கர்நாடகத்தில் அதிகரித்து வருகிறது. பெங்க ளூரில் கன்னடர்கள் நடத்திய வன் முறை தாக்குதலில் 50-க்கும் மேற்பட்ட பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதல் வன்மையாக கண் டிக்கத்தக்கதாகும்.
கர்நாடகத்தில் தமிழகத்துக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை களை நீதிபதி தீபக்மிஸ்ரா தலை மையிலான உச்ச நீதிமன்ற அமர்வு கடுமையாக கண்டித்திருக்கிறது. அதன்பிறகும் கர்நாடகத்தில் தமிழ கத்துக்கு எதிரான வன்முறைகள் நடத்தப்படுகின்றன என்றால் அவை அம்மாநில அரசின் ஆதரவு இல்லாமல் நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை. ஆகவே, இந்த கலவரத்துக்கு கர்நாடக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.
இந்திய அரசியல மைப்புச் சட்டத்தின் 365-வது பிரிவைப் பயன்படுத்தி பெங்க ளூர், அதைச் சுற்றியுள்ள பகுதி களை மத்திய அரசின் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். ராணுவத்தையும், துணை ராணுவ படைகளையும் அனுப்பி அப்பகுதிகளிலுள்ள தமிழர்களுக்கும், தமிழர்களின் உடைமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
திருமாவளவன் வலியுறுத்தல்:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டம் தலைவிரித்தாடுகிறது. பெங்களூர் மற்றும் மைசூர் பகுதிகளில் உள்ள தமிழர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். பிரதமர் உடனடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட வேண்டும். தமிழர்களின் உடமைகளுக்கும் தமிழ் மக்களுக் கும் பாதுகாப்பு அளிக்கும் வகை யில் துணை ராணுவத்தை உடனடி யாக கர்நாடகாவுக்கு அனுப்ப வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.