ராயபுரம், விருகம்பாக்கத்தில் நாளை ‘தி இந்து’ குழுமம் சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி

ராயபுரம், விருகம்பாக்கத்தில் நாளை ‘தி இந்து’ குழுமம் சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி
Updated on
1 min read

‘தி இந்து’ குழுமம், தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து ராயபுரம், விருகம்பாக்கம் பகுதி களில் நாளை மரக்கன்றுகளை நட உள்ளது.

வார்தா புயலால் சென்னையில் ஆயிரக்கணக்கான மரங்கள் சாய்ந் தன. இதையடுத்து, சென்னையில் இழந்த பசுமைப் போர்வையை மீட்டெடுக்கும் விதமாக ‘பசுமை சென்னை’ என்ற கருத்தை மைய மாகக் கொண்ட பணியை ‘தி இந்து’ குழுமம் தொடங்கியுள்ளது. இதன் மூலம், தன்னார்வ அமைப்புகளுடன் சேர்ந்து பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு வரு கின்றன.

இதன் ஒரு பகுதியாக நாளை காலை 6 மணிக்கு ராயபுரத்திலும் (9498031934), காலை 11 மணிக்கு விருகம்பாக்கத்தில் உள்ள ஜெய் கோபால் கரோடியா பெண்கள் பள்ளியிலும், ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு ஆவடியிலும் (9994816896) மரக்கன்றுகள் நடப் பட உள்ளன. காலை 7 மணிக்கு சிட்லபாக்கத்தில் (8870005455) மரங்கள் சீரமைப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

சென்னையின் பசுமைப் போர் வையை மீட்டெடுக்கும் முக்கியத் துவம் வாய்ந்த இந்தப் பணியில், விருப்பம் உள்ள தன்னார்வலர் கள் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு, அடைப்புக் குறியில் கொடுக்கப்பட்டுள்ள செல்போன் எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in