

கேரள மக்களின் புத்தாண்டு தினமான ‘விஷூ’ பண்டிகையை முன்னிட்டு, மலையாள மொழி பேசும் மக்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “மலையாள புத்தாண்டு தினமான விஷூ திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். கேரளத்தின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விஷூ திருநாளன்று, மலையாள மக்கள் அதிகாலையில் கண் விழித்ததும் முதலில் விஷூக்கணியை கண்டு, மலரும் இப்புத்தாண்டு தம் வாழ்வில் எல்லா நன்மைகளையும் நல்கிடும் ஆண்டாக மலர வேண்டும் என கடவுளை வழிபடுவர். இப்புத்தாண்டு மலையாள மக்கள் வாழ்வில் எல்லா நலன்களையும் வளங்களையும் வழங்கிடும் ஆண்டாக மலரட்டும்” என்று கூறியுள்ளார்.