

சென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி நிறுவன இயக்குனர் (பொறுப்பு) எம்.ரவிச்சந்திரன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஏப்ரல் 5 (இன்று), 12, 19 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமைகள்) சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் நடத்தப்படுவதாக இருந்த தொலைதூரக்கல்வி பி.காம். (வணிகவியல், வங்கி மேலாண்மை, கணினி பயன்பாடு, கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப்), எம்.காம். படிப்புகளுக்கான செமினார் வகுப்புகள், நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்டு ஏப்ரல் 27, மே 4, 11 ஆகிய தேதிகளுக்கு தள்ளி வைக்கப்படுகின்றன.