

திருப்பூர் வடக்கு, தெற்கு மற்றும் பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர்களின் வீடுகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தொகுதி உறுப் பினர்கள் கே.என்.விஜயகுமார் (திருப்பூர் வடக்கு), சு.குணசேகரன் (திருப்பூர் தெற்கு), கரைப்புதூர் நடராஜன் (பல்லடம்) ஆகியோர் காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூ ரில் உள்ள சொகுசு விடுதியில் தங்கி இருந்து, சசிகலாவுக்கு ஆதரவளித்து வந்தனர். திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பி னர் சத்தியபாமா ஓ.பன்னீர்செல் வத்துக்கு ஆதரவு அளித்துள்ளார். ப.தனபால், அவிநாசி சட்டப்பேர வைத் தொகுதி உறுப்பினராக உள்ளார்.
தொகுதி மக்களின் கருத்து களை கேட்காமல் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர்கள் தன்னிச் சையாக முடிவெடுத்து இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள தாக அதிமுக தொண்டர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே ‘திருப்பூர் தெற்கு, வடக்கு மற்றும் பல்லடம் தொகுதிகளில் தேர்வான அதிமுக சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பி னர்களின் வீடுகளை நாளை (பிப்.19) முற்றுகையிடுவோம்’ எனவும், அதற்கு ஆதரவு கோரியும் முகநூல், கட்செவி அஞ்சலில் (வாட்ஸ்-அப்) உள்ளிட்ட சமூக வலைதளங்களில் குறுந்தகவல் பரப்பப்படுகிறது.
வாக்களித்த பெரும்பான்மை மக்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட முடிவு எனவும், ஓ.பன்னீர்செல் வத்தை முதல்வராக்க வேண்டும் எனவும் தங்களது கருத்தை பதி விட்டுள்ளனர்.
இதையடுத்து, திருப்பூர் மாவட்ட உளவுத்துறை போலீஸார் கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டப்பேர வைத் தொகுதி உறுப்பினர் வீடு களை முற்றுகையிட்டால், யார் தலைமை வகிப்பார்கள் என்பது தான் அவர்களின் பிரதான கேள்வியாக உள்ளது.