

ஜல்லிக்கட்டு போராட்ட கலவரம் குறித்த விசாரணை நீதிமன்றக் கண்காணிப்பில் நடைபெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜல்லிக்கட்டு போராட்ட கலவரம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். ஆனால் குற்றமிழைத்த காவலர்களும், காவல்துறை அதிகாரிகளும் அதே இடத்தில் பணிபுரிகின்றனர். விசாரணைக்கு உட்படுத்தப்படுபவர்கள் அதே பகுதியில் நீடிப்பது விசாரணை நேர்மையாக நடைபெற உதவாது. எனவே, குற்றம் சுமத்தப்பட்டுள்ள காவல்துறையினரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண் டும்.
காவல்துறையின் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டு கள் எழுந்துள்ள நிலையில் உண்மைகள் முழுவதும் வெளிவரவும், நியாயமான பரிந் துரைகள் அமல்படுத்தப்படவும் உயர்நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும். எனவே, தமிழக அரசு உயர் நீதிமன்ற கண்காணிப்பில் நடைபெறக்கூடிய விசாரணையை இப்பிரச்சினையில் நடத்த வேண்டும் என்று அறிக்கையில் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தி யுள்ளார்.