பெண்கள், குறைந்த வருவாய் பிரிவினருக்கு சிண்டிகேட் வங்கி கடன் திட்டங்கள் அறிமுகம்

பெண்கள், குறைந்த வருவாய் பிரிவினருக்கு சிண்டிகேட் வங்கி கடன் திட்டங்கள் அறிமுகம்
Updated on
1 min read

பெண்கள் தொழில் தொடங்கவும், குறைந்த வருவாய் பிரிவினர் வீடு கட்டவும் உதவும் வகையில் சிண்டிகேட் வங்கி சிறப்பு கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சிண்டிகேட் வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சிண்டிகேட் வங்கியின் நிறுவனர் நாளையொட்டி 'சிண்ட் மஹிளாசக்தி', 'சிண்ட்குதீர்' ஆகிய கடன் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சிண்ட்மஹிளாசக்தி திட்டத்தின்கீழ் பெண்கள் சிறு தொழில், கடைகள் தொடங்க முடியும். ஏற்கெனவே செய்து வரும் தொழிலை விரிவாக்கம் செய்யவும், முதலீட்டை அதிகப்படுத்தவும் இந்த கடனை பெற்றுக்கொள்ளலாம்.

இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை கடன் பெற முடியும். ரூ.10 லட்சம் வரை 10.25 சதவீத வட்டி யும், ரூ.10 லட்சத்துக்கு மேல் என்றால் ஏற்கெனவே அமலில் உள்ள வட்டி விகிதத்தில் 0.25 சதவீத வட்டி தள்ளுபடியும் கிடைக்கும். கடனைப் பெற பிணைத் தொகை செலுத்தத் தேவையில்லை.

பிராசஸிங், ஆவணக் கட்டணங்கள் கிடையாது. தேசிய சிறு தொழில் கழகம், மாவட்ட தொழில் மையம், சுய உதவிக் குழுக்கள் ஆகியவை பயனாளிகளை பரிந்துரை செய்யலாம். பயனாளிகளுக்கு தேவை ஏற்பட்டால் பயிற்சியும் வழங்கப்படும்.

சிண்ட்குதீர் திட்டத்தின்கீழ் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர், குறைந்த வருவாய் பிரிவினர் சொந்தமாக வீடு கட்ட கடன் பெறலாம். பயனாளியின் ஆண்டு வருவாய் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் ரூ.5 லட்சம் வரையும், குறைந்த வருவாய் பிரிவினர் ரூ.10 லட்சம் வரையும் கடன் பெறலாம்.

இந்த கடனுக்கு 10.25 சதவீத வட்டி செலுத்த வேண்டும். பிராசஸிங், ஆவணக் கட்டணம் கிடையாது. கடனை அதிகபட்ச மாக 30 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்தலாம். இத் திட்டத்தின்கீழ் கடன் பெறு பவர்கள் வீட்டில் கட்டாயமாக கழிப்பறை கட்ட வேண்டும். சூரிய மின்விளக்குகளைப் பொருத்தவும் கடன் வழங் கப்படும். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in