

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் நந்தனம் அரசினர் ஆடவர் கலைக்கல்லூரி (தன்னாட்சி) கலை யரங்கத்தில், தமிழ் இலக்கியத்துக் கான முனைவர் பட்டப் பொது வாய்மொழித் தேர்வு நேற்று நடைபெற்றது.
இதில், நெறியாளர் முனைவர் கோ.சரோஜா (தமிழ்த் துறை தலைவர் (ஓய்வு), அரசு ஆடவர் கலைக்கல்லூரி (தன்னாட்சி), நந்தனம்), புறநிலைத் தேர்வாளர் முனைவர் வா.மு.சே.ஆண்டவர் (தமிழ் இணைப்பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை) ஆகியோர் பங்கேற்றனர்.
இதில், கஸ்தூரி & சன்ஸ் குழும தலைவர் என்.ராம் கலந்துகொண்டு பேசியதாவது: அமெரிக்க ஹார் வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்த அமெரிக்கத் தமிழர்கள் முயன்று வருகின்றனர். இருக்கையை நிறுவுவதற்கு நிதி ஆதாரங்கள் தொடர்பாகவும் அதனை அனைவருக்கும் தெரியப் படுத்தவும் வரும் 25-ம் தேதி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அந் நிகழ்ச்சிக்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும். இவ்விருக்கை சங்க இலக்கியம் தொடர்பாக அமையும். கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்களின் கண்டு பிடிப்புகளின் வழி இவ்விருக்கை அமைக்க முயற்சி செய்து வருகிறோம். இவ்வாறு என்.ராம் பேசினார்.