பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆதி திராவிடர் விடுதிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆதி திராவிடர் விடுதிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
Updated on
1 min read

அரசு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் சேருவதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

அரசு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் விடுதிகளில் 2016-2017-ம் கல்வியாண்டில் ஏற்படுகின்ற காலியிடங்களுக்கு புதிதாக மாணவ மாணவியரைச் சேர்க்க பள்ளி, கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிலும் மாணவ மாணவியரிட மிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரரின் பெற்றோர்களது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் மாணவ-மாணவியருக்கு இருப்பிடம், உணவு வசதி இலவசமாக செய்து தரப்படும்.

விடுதியில் சேர விரும்பும் மாணவ-மாணவியர்கள் தாங்கள் பயிலும் பள்ளி,கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்கு அருகிலுள்ள ஆதி திராவிடர் நல விடுதிகளின் காப்பாளர்களிடமிருந்து விடுதி சேர்க்கை விண்ணப்ப படிவத்தைப் பெற்று, கேட்கப்பட்டுள்ள உரிய ஆவணங்களுடன் விண்ணப் பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

பள்ளி மாணவர்கள் வரும் 19-ம் தேதிக்குள்ளும், கல்லூரி மாணவர்கள் வரும் ஜூலை 14-ம் தேதிக்குள்ளும் சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளரிடம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in