

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே கரைசுத்து உவரியில் உள்ள சசிகலா புஷ்பா கணவர் லிங்கேஸ்வரனின் பூர்வீக வீடு மீது மர்ம நபர்கள் நேற்று கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
திருநெல்வேலியிலிருந்து 70 கி.மீ. தொலைவில் கரைசுத்து உவரி உள்ளது. இங்கு சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வரனின் பூர்வீக வீடு உள்ளது. தற்போது லிங்கேஸ்வரன் குடும்பத்துடன் சென்னையில் வசிப்பதை அடுத்து, பூர்வீக வீட்டை அப்பகுதியில் உள்ள பாண்டி என்பவருக்கு மாத வாடைக்கு கொடுத்திருந்தார்.
மாநிலங்களவையில் அதிமுக தலைமை மீது சசிகலா புஷ்பா பகிரங்க குற்றச்சாட்டு தெரிவித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், நேற்று பிற்பகலில் அடையாளம் தெரியாத சிலர் காரில் வந்து லிங்கேஸ்வரனின் பூர்வீக வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிவிட்டனர். இச்சம்பவத்தை அடுத்து அந்த வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.