மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை: சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா பெருமிதம்

மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை: சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா பெருமிதம்
Updated on
2 min read

தமிழகத்தில் இப்போது மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று, தான் போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் பிரச்சாரம் செய்த முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்த லில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர் களை ஆதரித்து, கடந்த எப்ரல் 9-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா சென் னையில் பிரச்சாரத்தை தொடங் கினார்.

நேற்று சென்னையில், தான் போட் டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் மக்களிடம் தனக்காக வாக்கு சேகரித் தார். நேற்று மாலை 4.57 மணிக்கு போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து முதல்வர் ஜெயலலிதா புறப்பட்டார். கத்தீட்ரல் சாலையில், மகளிர் அணி யினர் முதல்வருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தொடர்ந்து, ராதா கிருஷ்ணன் சாலை, காமராஜர் சாலை, ராயபுரம் என பல்வேறு பகுதி களிலும் சாலையோரங்களில் பொது மக்கள், கட்சியினர் திரண்டுஉற்சாக வரவேற்பு அளித்தனர். ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட ராயபுரம் சூரிய நாராயண செட்டி தெரு மற்றும் ஜீவரத்தினம் சாலை சந்திப்புக்கு மாலை 5.25 மணிக்கு வந்தார். அவரை அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், வெங்கடேஷ் பாபு எம்பி, உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அப்போது அங்கு கூடியிருந்த மக்களிடையே முதல்வர் ஜெயல லிதா பேசியதாவது:

கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் என்னை நீங்கள் மகத்தான வெற்றி பெறச் செய்து, என் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுள்ளீர்கள். 2016 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் இந்த தொகுதியில் நான் மீண்டும் போட்டியி டுகிறேன். என்னை மீண்டும் மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

கடந்த 2011-ல் ஆட்சிப் பொறுப் பேற்றபோது பல மணி நேரம் மின் வெட்டு இருந்தது. இப்போது மின் வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை. சட்டம்- ஒழுங்கு சிறந்த முறையில் பராமரிக்கப்படுகிறது. இந்த தொகுதி யில், காசிமேடு மீன்பிடி துறைமுகம் ரூ.92.63 கோடியில் புனரமைக்கப் பட்டு, நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட் டுள்ளன.

பவர்குப்பம் பகுதியில் 556 மற்றும் அரங்கநாதபுரம் திட்டப்பகுதியில் 480 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி வழங்கப்பட்டுள்ளன. அரசு ஐடிஐ, கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ர வரி மாதம் ரூ.193.26 கோடிக்கான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப் பட்டுள்ளது. இத்திட்டங்கள் விரை வில் முடிக்கப்படும். இப்பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 97 ஆயிரத்து 411 குடும்பங்களுக்கு ரூ.48 கோடி நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

எவ்வளவு மழை பெய்தாலும் வெள்ளம் தங்காத வண்ணம் மழைநீர் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக ஆட்சி அமைந்ததும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளோம்.

மீன்பிடி தடைக்காலம், மீன்பிடி குறைந்த காலத்துக்கான உதவித் தொகைகள் ரூ.5 ஆயிரமாக உயர்த் தப்படும். மீனவர்களுக்கு தனி வீடுகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும். மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினியுடன் கட்டண மில்லா இணையதள வசதி வழங்கப் படும். கருவுற்ற தாய்மார்களுக்கான நிதியுதவி, ரூ.18 ஆயிரமாக உயர்த்தப் படும். 100 யூனிட் மின்சாரத்துக்கு கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. பொங்கலுக்கு கோ -ஆப்டெக்ஸில் துணி வாங்க ஒரு குடும்பத்துக்கு ரூ.500 மதிப்பில் வெகுமதி கூப்பன் வழங்கப்படும். அரசு கேபிள் டிவி வாடிக்கையாளர்களுக்கு செட் ஆப் பாக்ஸ் மற்றும் குடும்ப அட்டைதாரர் களுக்கு இலவச கைபேசி வழங்கப் படும். திருமண நிதியுதவியுடன் 8 கிராம் தங்கம், பெண்களுக்கு மொபெட், ஸ்கூட்டர் வாங்க 50 சதவீதம் மானியம், பெண்களுக்கு ஓட்டுநர் பயிற்சியுடன் ஆட்டோ வாங்க மானியம் வழங்கப்படும். மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப் பட்டு பூரண மதுவிலக்கு என்ற நிலை எய்தப்படும். செறிவூட்டப்ட்ட ஆவின் பால் ஒரு லிட்டர் ரூ.25-க்கு வழங்கப் படும். அரசின் சேவைகளை பெற அம்மா பேங்கிங் கார்டு வழங்கப்படும். நீங்கள்தான் என் உயிர் மூச்சு. என் மீது உங்களுக்கும், உங்கள் மீது எனக்கும் நம்பிக்கை உள்ளது. நம்பிக்கை வெற்றி பெற, நாடகம் தோற்க இடைத்தேர்தலைவிட மகத் தான வெற்றியை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, சூரிய நாராயண செட்டி தெரு, வீரராகவன் தெரு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, அருணாச்சலேஸ்வரர் கோவில் தெரு, சேணியம்மன் கோயில் தெரு வழியாக மார்க்கெட் தெரு, வ.உ.சி.சாலை சந்திப்பில் குழுமியிருந்த மக்களிடையே பேசினார். தொடர்ந்து, வைத்தியநாதன் பாலம், எண்ணூர் நெடுஞ்சாலை சந்திப்பு, எண்ணூர் நெடுஞ்சாலை- ஜெ.ஜெ. நகர் சந்திப்பு, மணலி சாலை எழில் நகர் ஆகிய ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்டபகுதிகளில் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in