மாணவர் சூரஜூக்கு ஸ்டாலின் நேரில் ஆறுதல்

மாணவர் சூரஜூக்கு ஸ்டாலின் நேரில் ஆறுதல்

Published on

மாட்டிறைச்சி விவகாரத்தில் தாக்குதலுக்கு உள்ளான ஐஐடி மாணவர் சூரஜை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

சென்னை ஐஐடியில் மாட்டுக்கறி திருவிழா நடத்திய சூரஜ் என்ற மாணவர் மீது வேறு சில மாணவர்கள் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தினர். அதைத் தொடர்ந்து, மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நேற்றும், நேற்று முன்தினமும் ஐஐடி வளாகம் முன்பு போராட்டம் நடத்தினர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சூரஜ் மீதான தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சூரஜை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

மேலும், அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களிடம் சூரஜின் உடல் நலன் குறித்தும், அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை கள் குறித்தும் கேட்டறிந்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in